நேபாளம்: 14 வயது மாணவி ஒருவர் தனது ஒன்றரை வயது தம்பியை தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் சம்பவம் பலரின் மனதை உருக்கி வருகிறது.
9ம் வகுப்பு படிக்கும் அஸ்மிதா தமங் என்ற மாணவியின் தாயார் திடீரென உயிரிழந்ததால் குடும்பத்தின் பொறுப்பு அவரது தோள்களில் விழுந்துள்ளது.
வேலைக்குச் செல்லும் தந்தையின் காரணமாக தம்பியை கவனிக்க யாரும் இல்லாததால், அவரை பள்ளிக்கும் அழைத்துச் சென்று பராமரித்து வருகிறார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பலர் அவருக்கு கல்வி உதவித்தொகை, குழந்தை பராமரிப்பு உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்க முன்வந்துள்ளனர்.