மேற்குவங்கம்: மேற்கு வங்காளத்தில் ஆட்சியை இழந்த திரிணாமுல் காங்கிரசுக்கு மேலும் ஒரு பின்னடைவாக, கொல்கத்தா மாநகராட்சி மேயர் பிர்ஹாத் ஹக்கீம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தனது 15 ஆண்டுகால ஆட்சியை இழந்தது.
தேர்தல் தோல்விக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் அடுத்தடுத்து பல்வேறு அரசியல் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.
கட்சியில் 58 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தனர்.
இந்த நிலையில், மம்தா பானர்ஜிக்கு மேலும் ஒரு பின்னடைவாக கொல்கத்தா மாநகராட்சி மேயர் பிர்ஹாத் ஹக்கீம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எம்.எல்.ஏ.வாகவும் உள்ள ஹக்கீம், கொல்கத்தா மாநகராட்சி மேயராக பணியாற்றி வந்த நிலையில், அவரது ராஜினாமா அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.