மும்பை: எந்த சூழலிலும் தனது சிரிப்பை இழக்காமல் இருப்பதுதான் தனது பலம் என்றும், அதுவே தனது அடையாளம் என்றும் நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் பூஜா ஹெக்டே, தமிழில் ‘முகமூடி’, ‘பீஸ்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே தனது வாழ்க்கை குறித்தும், தனக்குப் பிடித்த குணம் குறித்தும் மனம் திறந்து பேசினார்.
அவர் கூறுகையில், “என்னைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான புரிதல் இருக்கும். சிலருக்கு என் நடிப்பு பிடிக்கும். சிலருக்கு என் நடனம் பிடிக்கும். ஆனால் எனக்கு என்னிடம் மிகவும் பிடித்த விஷயம் சிரிப்புதான். எந்த சூழலிலும் சோகம், வலி, வேதனை ஆகியவற்றை வெளிப்படுத்தாமல் சிரித்துக்கொண்டே இருப்பேன். அதுதான் என் பலம். அதுவே என் அடையாளம்” என்றார்.