சென்னை: அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் தனக்கு இல்லை என்றும், சம்பாதிக்கும் பணத்தின் மூலம் மக்களுக்கு உதவுவதே தனது வாழ்க்கை நோக்கம் என்றும் நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாலா, அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவர் கூறுகையில், “எனக்கு அரசியல் அறிவு கிடையாது. அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை. நான் அவ்வளவு பெரிய ஆளும் கிடையாது.
என்னால் முடிந்தவரை நான் சம்பாதிக்கும் பணத்தை மக்களுக்கு உதவ பயன்படுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம். எனக்கு எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என்பதை ஏற்கனவே பல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளேன்.
என் வாழ்நாளின் கடைசி வரை உழைத்து, அதில் வரும் வருமானத்தின் மூலம் மக்களுக்கு உதவி செய்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு என் பயணம் தொடரும்” என்றார்.