புதுடில்லி: புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய கீமோதெரபி மருந்துகளின் விலையை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
புற்றுநோய் சிகிச்சையில் பரவலாக பயன்படுத்தப்படும் கார்போபிளாட்டின் மற்றும் சிஸ்பிளாட்டின் உள்ளிட்ட மருந்துகளின் விலையை திருத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச சந்தையில் மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததால் உற்பத்திச் செலவும் உயர்ந்துள்ளது. ஆனால் தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் இந்த மருந்துகளின் விலையை அரசு கட்டுப்படுத்தி வந்தது.
தற்போதைய விலையில் உற்பத்தி செய்வது நஷ்டகரமானது என பல நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்ததால் மருந்து பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவானது.
இதையடுத்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் விலை உயர்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.