சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுக உறுப்பினராக இணைந்தார்.
1988-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த பெஞ்சமின், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர், சென்னை மாநகராட்சி துணை மேயர், அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
2021 மற்றும் சமீபத்திய சட்டசபை தேர்தல்களில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், தற்போது திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.