3 நாட்கள் தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர். தரிசன வரிசை 5 கி.மீ. தூரம் நீண்டுள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக VIP பிரேக் தரிசனம் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இலவச தரிசன பக்தர்கள் 30 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.