சென்னை: திமுக முன்னாள் அமைச்சரான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் இல்லம், சென்னை மயிலாப்பூரில் உள்ள வீடு மற்றும் அபிராமபுரத்தில் உள்ள அவரது சகோதரரின் இல்லம் உள்ளிட்ட சுமார் 19 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் கட்சி நிதி என்ற பெயரில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சில நிறுவனங்களை மிரட்டி சட்டவிரோத பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
