வாஷிங்டன்: ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதன் நிலத்தடி அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா-ஈரான் இடையே அணுசக்தி விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்பதே அமெரிக்காவின் முதன்மையான நோக்கம் என தெரிவித்த டிரம்ப், ஈரான் அணு ஆயுதத்தைப் பெற முடியாத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் கண்டறியப்பட்டால், நிலத்தடி அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரானில் நடைபெறும் நடவடிக்கைகளை அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், ஈரான் ஏதேனும் தவறு செய்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ராணுவத்தின் தலையீட்டால் மத்திய கிழக்கில் மிகப்பெரிய அளவிலான மோதல் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
