சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சேலம் காவல் ஆணையராக இருந்த ஜோஷி நிர்மல் குமார், சென்னை தலைமை அலுவலக நவீனப்படுத்துதல் பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாநகர கூடுதல் ஆணையராக இருந்த பாபு, சேலம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி, சென்னை காவல் உளவுப் பிரிவு இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஐ.ஜி. தேவராணி, சேலம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி. பத்ரி நாராயணன், சென்னை அடையாறு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏ.சி. கார்த்திகேயன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை போதைப்பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி. மதிவாணன், பரங்கிமலை துணை ஆணையராகவும், அப்பதவியில் இருந்த ஸ்ரீனிவாசன் போதைப்பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி.யாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி எஸ்.பி. பொறுப்பில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஸ்டாலின், சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர பாதுகாப்பு துணை ஆணையர் சுந்தர வடிவேல், காவலர் நலன் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பாஸ்கரன், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் வடக்கு துணை ஆணையர் அங்கித் சிங், சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி. ஸ்டாலின், சிபிசிஐடி தென் மண்டல எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
