அயர்லாந்தில் உள்ள பல்வேறு ஊடக நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்நாட்டின் தேசிய ஒலிபரப்பு நிறுவனமான ஆர்டிஇ உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் காலி செய்யப்பட்டன. ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் ஒரு மிரட்டல் போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மற்ற மிரட்டல்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊடக நிறுவனங்களை குறிவைத்து இத்தகைய மிரட்டல்கள் விடுக்கப்படுவது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
