நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி இணைந்து தீபாவளியைக் கொண்டாடிய புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
பொதுவாகத் தங்களுடைய குடும்ப வாழ்க்கையை வெளிப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டாத அஜித் மற்றும் ஷாலினி, அவ்வப்போது பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.
அந்த வகையில் ஷாலினி வெளியிட்டுள்ள தீபாவளிப் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அஜித்தின் திரைப்படப் பணிகள், கார் பந்தயப் போட்டிகள் மற்றும் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தப் புகைப்படம் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாடிய அஜித்தின் புகைப்படத்தைப் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
