பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ள பாராட்டு தற்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்திய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு cள்ள இப்படத்தின் காட்சியமைப்பு, தொழில்நுட்பத் தரம் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு ஆகியவை ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இப்படத்தின் காட்சிகளைப் பாராட்டிய ராம் கோபால் வர்மா, அதன் பிரம்மாண்டத்தை வியந்து குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரன்பீர் கபூர், யஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியமான படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், ராம் கோபால் வர்மாவின் பாராட்டும் படத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது.
