இன்றைய இளம் தலைமுறையினரின் காதல், வாழ்க்கை மற்றும் உறவுகள் குறித்த புரிதலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது ‘லவ் மேட்டர்’ திரைப்படம்.
ஹை கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் செல்வ அன்பரசன் தயாரிக்கும் இப்படத்தை மகாதாரா பகவத் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் இணையத்தில் பிரபலமான லுங்கி பாய்ஸ் குழுவைச் சேர்ந்த ராஜ்பிரியன் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக அவர் பாடியுள்ள துள்ளலான பாடல் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான ‘ஆரம்பம் ஆரம்பம்’ பாடலைப் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.என். சுரேந்தர் பாடியுள்ளார். இயன் கதாநாயகனாகவும், அபிநயா கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். இயக்குநர் ரஞ்சித் ராகவா, ராயல் பிரபாகர், அச்சாரம் சேகர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
குறிப்பாக இப்படத்தின் இயக்குநர் உள்ளிட்ட முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்கள் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
