சென்னை: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவுக்கு மசாலா பூரியை அருமையாக செய்வோமா.
தேவையான பொருட்கள்:
– கோதுமை மாவு – 2 கப்
– உருளைக்கிழங்கு – 2
– வெங்காயம் – 1
– மிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி
– சீரகத்தூள் – அரை தேக்கரண்டி
– உப்பு, எண்ணெய்
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். அதனுடன் வெங்காயம், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்க்கவும்.
கோதுமை மாவுடன் இந்தக் கலவையைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசையவும்.
சிறிய உருண்டைகளாக உருட்டி பூரிகளாகத் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தயிர் அல்லது உருளைக்கிழங்கு மசாலாவுடன் பரிமாறலாம்.
