சென்னை: கிராமத்து பாணியில் காரசாரமாக பூண்டு குழம்பு செய்து கொடுத்து பாருங்கள். குடும்பத்தினர் அருமையாக சாப்பிட்டு பாராட்டுவார்கள்.
தேவையான பொருட்கள்:
– பூண்டு – 20 பல்
– சின்ன வெங்காயம் – 15
– புளி – சிறிய எலுமிச்சை அளவு
– மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
– தனியாத்தூள் – 2 தேக்கரண்டி
– வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை
– நல்லெண்ணெய், உப்பு
செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும். பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து கிளறி புளிக்கரைசலை ஊற்றவும். தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
