சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் தரும் காளான் மிளகு வறுவலை வீட்டில் அருமையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
– காளான் – 200 கிராம்
– வெங்காயம் – 2
– தக்காளி – 1
– மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
– இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
– கறிவேப்பிலை, சீரகம், உப்பு, எண்ணெய்
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் சுத்தம் செய்து நறுக்கிய காளானைச் சேர்த்து உப்பு போட்டு வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் மிளகுத்தூள் தூவி நன்கு கிளறி இறக்கவும். சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுவையான வறுவல் தயார்.
