சென்னை: ருசியும் சத்தும் நிறைந்த பாசிப்பருப்பில் பாயசம் செய்து இருக்கீங்களா? இல்லைன்னா இது உங்களுக்காகதான்.
தேவையான பொருட்கள்:
– பாசிப்பருப்பு – அரை கப்
– வெல்லம் – முக்கால் கப்
– தேங்காய்ப்பால் – 1 கப்
– ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
– முந்திரி, திராட்சை – தேவையான அளவு
– நெய் – 2 தேக்கரண்டி
செய்முறை: பாசிப்பருப்பை வாணலியில் லேசாக வறுத்து குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, வேகவைத்த பருப்புடன் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
பின்னர் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து குறைந்த தீயில் சூடாக்கவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துச் சேர்க்கவும். சுவையான பாயசம் தயார்.
