சென்னை: எத்தனை நாளைக்கு தான் வெறும் சப்பாத்தியை சாப்பிடுவீர்கள். ஆரோக்கியம் நிறைந்த புதினா சப்பாத்தி செய்து சாப்பிடலாம் வாங்க. சப்பாத்தி செய்யும்போது அதில் ஏதாவது காய்கறி துருவல்கள் சேர்த்து செஞ்சு கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்கல..
அதுபோல் மருத்துவ தன்மைகொண்ட சுவையான உடலுக்கு பொலிவையும், சுறுசுறுப்பையும் தரும் புதினாவையும் சேர்த்து செஞ்சு கொடுத்துப் பாருங்க. சப்பாத்தி அபார சுவையுடன் இருக்கும். குழந்தைகளும் ரசித்து ருசித்து வெளுத்து வாங்குவாங்க..
தேவையான பொருட்கள்:
புதினா – ஒரு கட்டுகோதுமை மாவு – ஒரு கப்சோளமாவு – ஒரு பங்குஇஞ்சி – சிறிதளவுபூண்டு – 10 பல்மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்தயிர் – 1/2 கப்வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்சோம்பு – 1 டீ ஸ்பூன்எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவையான அளவு
செய்முறை: புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். இஞ்சி-பூண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும். மாவுடன் தயிர், வெல்லம், எண்ணெய், புதினா, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்தூள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி தேய்த்து சுட்டெடுக்கவும். அருமையான சுவையில் புதினா சப்பாத்தி ரெடி.