சென்னை : நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து நடித்துள்ள ‘நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரி டேல்’ ஆவணப்படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் OTD தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் நயன்தாரா, தனுஷுக்கு ரூ.1 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியதை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நயன்தாராவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நயன்தாராவுக்கு ஆதரவாகவும், தனுஷுக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நயன்தாராவின் இந்த பதிவிற்கு பல்வேறு நடிகைகள் லைக் செய்துள்ளனர். நயன்தாராவின் இந்த கருத்து குறித்து பாடகி சுசித்ரா கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “நயன்தாராவுக்கு இந்த கஷ்டத்தை தனுஷ் கொடுக்கவில்லை.
யாரடி நீ மோகினி படப்பிடிப்பின் போது பிரச்சனையும் கொடுத்தது. நயன்தாராவின் பதிவை லைக் செய்த நஸ்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமா போன்ற நடிகைகள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றால் தனுஷை வாழ்த்த வேண்டும். இல்லையெனில், அனைத்து சலுகைகளும் குறைக்கப்படும். மோசமான கேரவன்கள் வழங்கப்படும். தனுஷ் 50 படங்களில் நடித்துள்ளார். அதனால் ஒரு படத்திற்கு 3 நடிகைகள் வீதம் 150 நடிகைகளுக்கு பிரச்சனை கொடுத்துள்ளார் தனுஷ்.
அம்மா வேடத்தில் நடித்த நடிகைகளைக் கூட அவர் துன்புறுத்தினார். சிலருக்கு பாலியல் துன்புறுத்தல், சிலருக்கு தொழில்ரீதியான துன்புறுத்தல், சிலருக்கு தனிப்பட்ட துன்புறுத்தல்களை வழங்கியுள்ளார். சில நடிகைகளின் இமேஜை கெடுக்கும் வகையில் செயல்படுகிறார். அவர் சைக்கோ, எல்லா வகையிலும் தொல்லை கொடுப்பார்” என்று சுசித்ரா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெறுக்கத்தக்க வகையில் பேசிய சுசித்ரா மீது தனுஷ் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.