ஐஸ்வர்யா லட்சுமி மலையாளத்தில் தனது ‘ஹலோ மம்மி’ படத்தை விளம்பரப்படுத்த பேட்டி அளித்துள்ளார். அதில் திருமணம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். “எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. எனக்கு 8, 10, 25 வயசுலயும் கல்யாணம் கனவு மாதிரி.
குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொள்ள நினைத்தேன். ஆனால் நான் வளர வளர என் பார்வை மாறியது. என்னைச் சுற்றியுள்ள பெரும்பாலான திருமணமானவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஒரு சிலர் மட்டுமே உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனக்கு இப்போது 34 வயதாகிறது. நான் பார்த்த ஒரே குடும்பம் அது ஒன்றுதான்.
அவர்களும் மலையாளிகள் அல்ல. மற்றவர்கள் சமரசங்களுடன் வாழ்வதை நான் காண்கிறேன். திருமணம் எனக்கு இல்லை என்பதை புரிந்து கொண்டு உணர்ந்தேன். என் அம்மாவிடம் மேட்ரிமோனி கணக்கைத் திறக்கச் சொன்னேன். நான் மேட்ரிமோனி இணையதளத்தில் இருந்தேன், ஆனால் அது ஒரு போலி கணக்கு என்று மக்கள் நினைத்தார்கள்” என்று ஐஸ்வர்யா லட்சுமி கூறினார்.