ஐதராபாத்: ராம் சரண் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் 4 நாட்களில் ரூ.292.5 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிப்பில் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள ‘பெத்தி’ திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியானது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சிவ ராஜ்குமார், திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விளையாட்டை மையமாகக் கொண்டு பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ‘பெத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் 4 நாட்களில் ரூ.292.5 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.