ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் இன்று (நவ., 28) பதவியேற்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 20 மற்றும் 23ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது.
இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, ஹேமந்த் சோரன் கவர்னர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆளுநரின் ஒப்புதலைத் தொடர்ந்து, ஜார்க்கண்டில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன் மட்டும் இன்று (நவ.28) முதல்வராக பதவியேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பலர் பங்கேற்க உள்ளனர்.