அடிலெய்டு: கடந்த வாரம் பெர்த்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்துவீசும்போது ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் அடிலெய்டில் வரும் 6-ம் தேதி தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையில், அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பியூ வெப்ஸ்டரை அணியில் சேர்த்துள்ளது. இந்நிலையில் 33 வயதான மிட்செல் மார்ஷ் கூறுகையில், “எனது உடல் நிலை நன்றாக உள்ளது. அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன்” என்றார்.
மிட்செல் மார்ஷின் உடற்தகுதி ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கலாம். முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.