புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்:- தற்போதுள்ள விதிகளின்படி, காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அனைத்து ரயில்களின் காத்திருப்பு பட்டியல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய, இந்திய ரயில்வே பண்டிகைகள், விடுமுறை நாட்கள் போன்றவற்றின் போது சிறப்பு ரயில்களை இயக்குகிறது. நிரந்தர மற்றும் தற்காலிக அடிப்படையில் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளும் சேர்க்கப்படுகின்றன. 2024-ம் ஆண்டில், ஹோலி மற்றும் கோடை விடுமுறையின் போது பயணிகளின் கூடுதல் கூட்டத்தைக் கையாள 13,523 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
துர்கா பூஜை, தீபாவளி, சனி பூஜையின் போது ஏற்படும் நெரிசலைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 1 முதல் நவம்பர் 30, 2024 வரையிலான காலகட்டத்தில் சுமார் 1.8 கோடி பயணிகளுக்கு சேவை செய்ய 7983 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.