திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆடுகளை காரில் கடத்தி கும்பலைப் பொதுமக்கள் வளைத்து பிடித்தனர். இருப்பினும் அவர்களை போலீசார் விட்டுவிட்டதால் ஆத்திரம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் தண்டலத்தில் ஆடுகளின் வாயைக் கட்டி காரில் கடத்திய 4 பேரை பிடித்து பின்புறமாக கைகளை கட்டிவைத்த பொது மக்கள், செவ்வாய்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால், திருடர்கள் மீது பெயரளவுக்கு சிஎஸ்ஆர் மட்டும் பதிவு செய்து விட்டு சிறையில் அடைக்காமல் போலீசார் விடுவித்தது ஏன் என மக்கள் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மிகவும் சிரமப்பட்டு ஆடு திருடர்களை பிடித்து கொடுத்தால் போலீசார் இப்படி விட்டு விட்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.