ஐதராபாத்: மறைந்த நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.,ராமாராவ் நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது. என்டிஆருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், என்.டி. ராமராவ் மகன் மோகனகிருஷ்ணா, என்டிஆர் இலக்கிய அறக்கட்டளை தலைவர் ஜனார்தன், உறுப்பினர் மதுசூதனராஜூ ஆகியோர் தெலுங்கானா அமைச்சர் நாகேஸ்வரராவ் மற்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டியை ஐதராபாத்தில் சந்தித்தனர். அப்போது, ஹைதராபாத்தில் என்.டி.,ராமராவ்க்கு, 100 அடி சிலை அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு சம்மதம் தெரிவித்த தெலுங்கானா முதல்வர், இதற்கான இடம் விரைவில் ஒதுக்கப்படும் என உறுதி அளித்தார்.