By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ரஷிய நிழல் கப்பலை கைப்பற்றிய பிரிட்டன்
    1 Min Read
    போப்புக்கு அரச விமானம் வழங்கிய ஸ்பெயின் மன்னர்
    1 Min Read
    வெனிசுலா கும்பல் தலைவன் வான்வழித் தாக்குதலில் பலி: டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    உலகின் முதல் டிரில்லியனர் ஆன எலான் மஸ்க்
    1 Min Read
    முன்னாள் தென் கொரியா அதிபருக்கு 30 ஆண்டு சிறை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குஜராத் போதைப்பொருள் நுழைவாயில்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
    1 Min Read
    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
    1 Min Read
    கேரளாவில் மீண்டும் பரவும் ஷிகெல்லா; பள்ளிகளுக்கு விடுமுறை
    1 Min Read
    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்; பயனர்கள் அவதி
    1 Min Read
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நத்தம் பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை மின்தடை
    0 Min Read
    மீன்பிடி தடைக்காலம் முடிவு; காசிமேட்டில் மீண்டும் பரபரப்பு
    1 Min Read
    உடல் எடை குறைய பெரும் உதவி புரியும் சப்ஜா விதைகள்
    2 Min Read
    நம்முடைய ஆற்றலுக்கும் வைட்டமின்களும் இயற்கை உணவுகளே சிறந்தது
    1 Min Read
    வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டத்திற்கு ஆதரவு: திமுக அரசுக்கு எதிரான அரசியல் பயணம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டத்திற்கு ஆதரவு: திமுக அரசுக்கு எதிரான அரசியல் பயணம்
தமிழகம்

விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டத்திற்கு ஆதரவு: திமுக அரசுக்கு எதிரான அரசியல் பயணம்

admin
Last updated: January 18, 2025 9:27 pm
By admin 2 Min Read
Share
SHARE

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 20 ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை சந்திக்க உள்ளார். இதற்கு தமிழக காவல்துறையும் அனுமதி வழங்கியுள்ளது. விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டிலேயே பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்.

தற்போது, போராட்டக் குழுவினருக்கு ஆதரவு தெரிவிக்க நேரில் செல்ல உள்ளார் விஜய். கட்சியின் முதல் மாநாட்டில் திமுகவை தனது அரசியல் எதிரியாக அறிவித்த விஜய், கள அரசியலின் முதல் படியிலும் திமுகவை எதிர்த்தே பயணத்தை தொடங்கியுள்ளார். மத்திய அரசுக்கு எதிராகவும், டங்ஸ்டன் எதிர்ப்பு உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜய்யின் பரந்தூர் பயணம் அரசியல் மக்களுக்கு கவர்ச்சியாகத் தெரிய வருகிறது. பரந்தூர் விமான நிலைய போராட்டம் 900 நாட்களுக்கு மேல் நீடித்து வருகிறது. ஆனால், இந்த போராட்டம் பெரும் அளவில் பேசப்படவில்லை. இந்நிலையில், விஜய் நேரடியாக போராட்டக் களத்திற்கு செல்ல இருக்கின்றார் என்பதால், ஒட்டு மொத்த தமிழக மக்களின் கவனமும் பரந்தூர் விமான நிலையம் பக்கம் திரும்பும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விஜய்யின் அரசியல் பயணம், குறிப்பாக கள அரசியலுக்கு அவர் முன்னோடியாகச் செல்லும் இந்த நடவடிக்கை, அவரது அரசியல் கிரேசை உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் விஜய் அரசியலில் நுழையாததாக விமர்சித்து வந்தனர், ஆனால் தற்போது அவர் நேரடியாக போராட்டங்களில் கலந்து கொண்டு, திமுக அரசுக்கு எதிராக வலுவான பங்கு வகிக்கின்றார்.

இதன் மூலம் திமுக அரசுக்கு பின்னடைவு ஏற்படக் கூடும் என்று கூறப்படுகின்றது. மேலும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், சட்ட ஒழுங்கு பிரச்சனை, பரந்தூர் விமான நிலைய விவகாரம், டாஸ்மாக் உள்ளிட்டவற்றால் அதிருப்தியில் உள்ளன. இந்நிலையில் விஜய்யின் கள அரசியல் ஆரம்பம், திமுகவுக்கு எதிரான பிரச்னைகளை மேலும் பெருக்கி, அவருக்கு ஆதரவு பெருகும் என எண்ணப்படுகிறது.

You Might Also Like

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை

நத்தம் பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை மின்தடை

மீன்பிடி தடைக்காலம் முடிவு; காசிமேட்டில் மீண்டும் பரபரப்பு

உடல் எடை குறைய பெரும் உதவி புரியும் சப்ஜா விதைகள்

நம்முடைய ஆற்றலுக்கும் வைட்டமின்களும் இயற்கை உணவுகளே சிறந்தது

TAGGED:DMKPoliticsTVKதமிழக வெற்றிக் கழகம்பரந்தூர்விஜய்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

அனந்தன் காடு டிரெய்லர் இன்று இரவு வெளியீடு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?