சென்னை: முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து மனு இன்று குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சங்கீதா, செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது கணவருக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்றபோது, விஜய் தரப்பின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் வழக்கை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அதன்படி, சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகலாம் என கூறப்படுகிறது.