சென்னை: யோகி பாபு நடித்துள்ள ‘கெணத்த காணோம்’ திரைப்படம் வரும் 16-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஆர்.பி. டாக்கீஸ் தயாரிப்பில் இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கிய திரைப்படம் ‘கெணத்த காணோம்’. ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்ய சோதனை’ போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்ற சுரேஷ் சங்கையா, இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகளின்போது உடல்நலக்குறைவால் காலமானார். பின்னர் அவருடன் பணியாற்றிய குழுவினர் படத்தின் பணிகளை நிறைவு செய்தனர்.
யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த மார்ச் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இதன்படி, ‘கெணத்த காணோம்’ திரைப்படம் வரும் 16-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.