சென்னை: தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அரசியல் வருகை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, த.வெ.க. அரசின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறிய சில கருத்துகள் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதையடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட விளக்கப் பதிவில், தனது ரசிகர்களையும் மக்களையும் தாய்க்குச் சமமாக மதிப்பவன் நான் என குறிப்பிட்டுள்ளார்.
மக்களை ‘நாய்கள்’ என்று குறிப்பிட்டதாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், அது முற்றிலும் பொய்யானது என்றும் தெரிவித்துள்ளார். த.வெ.க. தொண்டர்கள் தற்குறிகள் அல்ல, ‘தவெக-வின் அம்புக்குறி’ என்று தான் கூறியதாகவும், அந்த கருத்தை சூழலுக்கு புறம்பாக திரித்து தேவையற்ற சர்ச்சை உருவாக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
முழு வீடியோவையும் பார்த்து உண்மையை புரிந்துகொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.