சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் நட்புடன் விலகுவதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து த.மா.கா. விலகுவதாக அறிவித்தார். உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கட்சியை தனித்தன்மையுடன் வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும், கடந்த 12 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்ததால் கட்சியின் அடித்தள வலிமை குறைந்துள்ளதாக நிர்வாகிகள் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது எந்த கூட்டணியுடனும் கருத்து வேறுபாடு இல்லை என்றும், உள்ளாட்சித் தேர்தல் வரை கட்சி தனித்து செயல்பட்டு அடித்தளத்தை பலப்படுத்தும் என்றும் கூறினார்.