சென்னை: அசாமில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 5 அதிகாரிகளுக்கு திமுக எம்பி கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் தளவாடங்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் AN-32 ரக விமானம், அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் உள்ள ரௌரியா விமானப்படை தளத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 5 விமானப்படை அதிகாரிகள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்திற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், விமான விபத்தில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.