ஒடிசா: மழலையர் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முழுமையாக இலவச கல்வி வழங்கப்படும் என ஒடிசா முதல் மந்திரி மோகன் சரண் மாஹி அறிவித்துள்ளார்.
ஒடிசாவில் பாஜக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாநில முதல் மந்திரி மோகன் சரண் மாஹி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலத்தின் அனைத்து மாணவர்களும் கல்வி வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காக மழலையர் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என தெரிவித்தார். குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் பெண் குழந்தைகள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.
இந்த திட்டம் கல்வியை அனைவருக்கும் எளிதாக கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் அமல்படுத்தப்படுவதாகவும், இந்தியாவிலேயே முதல்முறையாக ஒடிசாவில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.