சென்னை: நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘விடுதலை’, ‘கருடன்’, ‘மாமன்’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூரி தற்போது ‘மண்டாடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இந்தப் படத்தை ஆர்.எஸ். இன்ஃபோ நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ‘மண்டாடி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.