சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது ‘ஜெயிலர் 2’ உருவாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக ஷாருக் கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது இடத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1986-ஆம் ஆண்டு வெளியான ‘பகவான் தாதா’ திரைப்படத்திற்குப் பிறகு, சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினிகாந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.