By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகின் முதல் டிரில்லியனர் ஆன எலான் மஸ்க்
    1 Min Read
    முன்னாள் தென் கொரியா அதிபருக்கு 30 ஆண்டு சிறை
    1 Min Read
    இந்திய மாம்பழங்களுக்கு தடையில்லை; நேபாள அரசு விளக்கம்
    1 Min Read
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
    1 Min Read
    கேரளாவில் மீண்டும் பரவும் ஷிகெல்லா; பள்ளிகளுக்கு விடுமுறை
    1 Min Read
    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்; பயனர்கள் அவதி
    1 Min Read
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    6 மணி நேரம் கடின அறுவை சிகிச்சை: 54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்
    2 Min Read
    திருச்சி மண்டலம் சார்பில் தஞ்சையில் ஸ்டேட் வங்கி ஊழியர் கலந்தாய்வு கூட்டம்
    2 Min Read
    ருசித்து சாப்பிட அருமையான சுவையில் குருமா செய்முறை
    1 Min Read
    தொடை சதையை குறைக்க சில எளிய பயிற்சிகள் உங்களுக்காக!!!
    2 Min Read
    செல்ல நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த உரிமையாளர்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விவசாயம் > தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்
விவசாயம்

தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்

Nagaraj
Last updated: June 3, 2026 4:03 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என்று வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளது.

மொத்த உணவு உற்பத்தியில் சுமார் 10-40 சதவீதம் வரை சேமிப்பின் போது வீணாகிறது. சரியாக சேமித்தால் மட்டுமே விதையின் முளைப்பு திறன் நன்கு இருக்கும். பாதுகாக்கப்படும் ஒவ்வொரு தானியமும் கூடுதலாக விளைவிக்கப்பட வேண்டிய ஓராயிரம் தானியத்திற்கு சமம் என்பதால் அவற்றை சரியாக பாதுகாக்க வேண்டியது நமது தலையாய கடமை ஆகும் வேளாண் துறை தெரிவித்துள்ளது.

தானியங்களை சேமித்து வைத்து தேவையுள்ள போது விற்பனை செய்வதால் அதிக விலை கிடைக்கும். சேமிப்பின் போது புழு, பூச்சிகள், வண்டுகள், எலிகள், இயற்கை மாற்றங்கள் போன்ற காரணிகள் தானியங்களை பாதித்து சத்துக்களை குறைப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றின் தரத்தையும் இழக்க வைக்கிறது.

சேமிப்பை பாதிக்கும் காரணிகள்

பூச்சிகள், பூஞ்சாணம், எலிகள், மாதிரி எடுத்தல் மற்றும் ஆய்வின் போது கையாளும் விதம் ஆகிய உயிர் காரணிகளும், வெப்பநிலை, ஈரப்பதம், சேமிப்பு, சுகாதாரம், வாயு மண்டல சூழ்நிலை, சேமிக்கும் பைகள் ஆகிய உயிரற்ற காரணிகளும் சேமிப்பை பாதிக்கின்றன.

புழு பூச்சிகள்:வயல் சேமிப்பு களஞ்சியம் போக்குவரத்து வரை அனைத்து நிலைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு சேதத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. சேமிக்கும் தானியங்களில் ஓட்டை போட்டு ஊட்டச்சத்தினை உண்பதோடு. தானியத்தின் முளைக்கும் தன்மையை பாதிப்படைய செய்கிறது.

எலிகள்: வயல்வெளியில் தொடங்கி வீடு வரை எளிதில் தானியங்களை பாழாக்கி கொண்டே இருக்கிறது. சுமார் 5 எலிகள் ஒரு மனிதன் உண்ணும் அளவிற்கு உணவை உட்கொள்கிறது. மேலும் எலிகளின் சிறுநீர், கழிவுகள், முடி முதலியவை தானியத்தில் கலந்து நோய்களை உருவாக்கிறது.

பதப்படுத்துதல்: பதப்படுத்தும் முறைகள் தவறாக இருந்தாலும், கவனக்குறைவாக இருந்தாலும் தானியங்களில் சேதம் உண்டாகிறது. இயந்திரங்களை தவறாக கையாளுதல். பழைய உபகரணங்களை பயன்படுத்துதல் போன்றவற்றால் தானியங்கள் நொறுங்கி புழு, பூச்சி, ஈரப்பதம் போன்ற காரணிகள் தாக்க வழி வகுக்கிறது.

சுற்றுச்சூழல் காரணிகள்: காற்றின் ஈரப்பதம், வெப்பம் ஆகியவை சேமிப்பை பாதிக்கும் காரணிகள். வெளிப்புற காற்று தானியத்தின் ஈரப்பதத்தை மாற்றுகிறது. காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை அதிகரிக்கும் போது பூச்சிகள் பூஞ்சாணங்களில் தாக்குதலும் அதிகரிக்கும். தானியங்கள் கரியமில வாயு, நீராவி, வெப்பம் முதலியவற்றை வெளியிடுகிறது அந்த நீராவி தானியத்தின் மீது படுகிறது. இதனால் தானிய ஈரப்பதம் அதிகமாகின்றது. தானியங்களை சரியான விகிதத்தில். சரியான அளவிற்கு காய வைக்காமல் விட்டுவிட்டால் எளிதில் பூச்சிகள், பூஞ்சாணம் முதலியவை தாக்கி துர்நாற்றம், சத்துக்கள் குறைவு, நச்சுத்தன்மை உண்டாதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. தானியங்களை கடும் வெயிலில் உலர்த்தினால் வெப்பம் ஒரே அளவில் தானியத்தில் ஊடுருவாமல் தானியங்கள் உடைய வாய்ப்பு உண்டு. எனவே காலை அல்லது மாலை வெயிலில் மட்டுமே உலர்த்துவது சிறந்தது.

சேமிப்பதற்கான ஈரப்பத அளவுகள்: நெல் 14 சதம், விதை நெல் 13 சதம், அரிசி 14 சதம், கோதுமை 12 சதம், மக்காச்சோளம் 12 சதம், பயறு வகைகள் 8-9 சதம்.

பாதுகாப்பான தானிய சேமிப்பு: தானியங்கள் சேமிக்கும் அறைகள் நன்றாக சுத்தம் செய்து எந்த வித பூச்சிகள், அதன் முட்டைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தானிய சேமிப்பிற்கு பயன்படுத்தப்படும் சாக்குகள் புதியதாகவும், பூச்சி அற்றதாகவும் இருக்க வேண்டும். பழைய சாக்குகளை மாலதியான் அல்லது டைகுளோர்வாஸ் 0.1 சத கரைசலை தெளித்து உலர்த்தி பின் பயன்படுத்தலாம். தரையில் வைக்காமல் கட்டைகள் மீது அடுக்கி வைக்க வேண்டும். மூட்டைகளை சுவற்றை ஒட்டி அடுக்காமல் நல்ல இடைவெளி விட்டு காற்றோட்டமாக அடுக்க வேண்டும். மூட்டைகள் மீது மாலதியான் 0.1 சதக்கரைசலை மூட்டை நனையாமல் அளவாக தெளித்து வரலாம். இது தவிர வேப்பங்கொட்டை தூளை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் பயிர் வகை தானியங்களில் கலந்து வைக்கலாம்.

டைகுளோர்வாஸ் 76 இசியுடன் 7 மில்லி லிட்டர் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 100 சதுர அடி பரப்பில் தெளிக்கலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை தானியத்தை எடுத்து அதில் பூச்சிகள் உள்ளனவா என்பதை தொடர்ந்து கண்காணித்து, இரண்டு பூச்சிகள் இருந்தால் சேதம் ஆரம்பிக்கவுள்ளது எனவும், இரண்டு பூச்சிகளுக்கு மேல் இருந்தால் அதிக சேதம் எனவும் கணக்கிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

You Might Also Like

வீட்டு தோட்டத்தில் பறவைகள் வரணுமா? அப்போ இதை செய்து பாருங்கள்

இந்திய மாம்பழங்களுக்கு தடையில்லை; நேபாள அரசு விளக்கம்

“18 மணி நேர மின்சாரத்தை எப்படி நம்புவது?” – தினகரன் கேள்வி

ரூ.134 கோடி சிறப்புத் தொகுப்பு ஏமாற்று நடவடிக்கை? எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தஞ்சாவூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

TAGGED:agriculturefarmersgrainsInsect damageStorageசேமிப்புதானியங்கள்பூச்சிகள் சேதம்விவசாயிகள்வேளாண்துறை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

6 மணி நேரம் கடின அறுவை சிகிச்சை: 54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?