தஞ்சாவூர்: கருப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்,விவசாயிகள் நெல்மணிகளை நிபந்தனை இன்றி கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் கூட்டத்திலிருந்து கருப்பு பேட்ச் அணிந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த விவசாய பிரதிநிதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கடலூர் மாவட்டத்தில் இடி மின்னல் தாக்கி நான்கு விவசாயிகள் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு 5 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த பொது மக்களுக்கு 10 லட்சம் இழப்பீடு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசு, இடி மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயிகளுக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
அனைத்து நெல்மணிகளையும் நிபந்தனை இன்றி மத்திய மாநில அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கூட்டத்தில் பங்குபெற்ற விவசாயிகள் கருப்பு பேட்ச் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.