By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வெள்ளை மாளிகையில் தடை – டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!
    1 Min Read
    தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவோம் – கனடா பிரதமர் மார்க் கார்னி
    1 Min Read
    கனடாவில் கொட்டும் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம்! அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள்
    1 Min Read
    நேரலை செய்தி ஒளிபரப்பியபோதே ஹெலிகாப்டர் விபத்து: லாஸ் ஏஞ்சல்ஸில் 3 பேர் பலி
    1 Min Read
    ஸ்வீடன் அலுவலக கலாசாரம் குறித்து இந்திய பெண் பகிர்ந்த வீடியோ வைரல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ‘ஜன் கவுஷல்’ திட்டத்தின் தூதராக சஞ்சு சாம்சன் – டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை சந்தித்தார்!
    1 Min Read
    சிறார்களின் பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம் – 18 வயது வரை செல்லுபடியாகும்
    1 Min Read
    சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்
    1 Min Read
    ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… மறுநாளே தாயை இழந்த வேட்பாளர்!
    1 Min Read
    திருப்பதி பிரம்மோற்சவம்: தமிழகத்தில் இருந்து தினமும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திருமாங்கல்ய தாலிகயிற்றை பிரம்மமுகூர்த்தமான அதிகாலை வேளையில் மாற்றுவதே சிறப்பு
    2 Min Read
    வீடுகளில் மயிலிறகை வைப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன!!!
    1 Min Read
    ஓடும் ஆட்டோவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை? தப்பிக்க குதித்த செவிலியர் காயம்
    1 Min Read
    மாரடைப்பால் ஸ்டியரிங்கில் சாய்ந்த அரசு பஸ் டிரைவர்: பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த சோகம்
    1 Min Read
    தவசிக்கீரை அளிக்கும் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: திருலோக்கி வந்து குருபகவானை தரிசித்து திருமண வரம் பெறலாம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > திருலோக்கி வந்து குருபகவானை தரிசித்து திருமண வரம் பெறலாம்
ஆன்மீகம்

திருலோக்கி வந்து குருபகவானை தரிசித்து திருமண வரம் பெறலாம்

Nagaraj
Last updated: September 19, 2026 2:42 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: வரன் அமையாத இளைஞர்கள், இளம் பெண்கள், பிரிந்துபோன தம்பதிகள், விதி வசத்தால் முதல் திருமண வாழ்க்கை சரிவர அமையாதவர்கள் எல்லோரும் திருலோக்கி தலம் வந்து குருபகவானை தரிசித்து பலன் பெறுகிறார்கள்.

குருவான பிரகஸ்பதிக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. பொன்னுக்கு ஏமம் என்ற ஒரு பெயரும் தமிழில் உண்டு. அந்த வகையில் குரு ஈசனை வழிபட்டு அருள் பெற்ற தலம் ‘ஏமநல்லூர்’. இன்று இத்தலத்தின் திருநாமம் ‘திருலோக்கி’.

காவிரியின் வடகரையில் இருக்கும் இந்த ஏமநல்லூரில் எழுந்தருளியுள்ள சுந்தரேச பெருமானை குரு பசு நெய் விளக்கேற்றி, கொன்றை மாலை அணிவித்து, முல்லைப் பூவால் அர்ச்சித்து, சாம கானம் பாடி, தயிர் அன்னம் நிவேதனம் செய்து வழிபட்டாராம்.

அதனால் மகிழ்ந்த ஈசன், குருவை வாழ்த்தி இந்த தலத்துக்கு வந்து உனது பார்வை பெறும் எல்லோரும் எல்லாவிதமான தோஷங்களும் விலகி ‘குரு பலம்’ பெற்று அவர்களது இனிய இல்லறம் சிறக்க ஆசிர்வதிக்கிறேன் என்று அருளினாராம்.

திருலோக்கி தலத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் குருபகவானுக்கு ரிஷபவாகனத்தில் காட்சியளித்த உமாமகேஸ்வர வடிவம் அற்புதமான திருவடிவமாகும். ரிஷப வாகனத்தில் அம்பிகையை ஆலிங்கனம் செய்தபடி ஈசன் காட்சியளிக்கும் அழகே அலாதியானது.

இந்த கோலத்தை தரிசித்த குரு பகவான் தனது வழக்கமான அபய முத்திரை விடுத்து இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் கும்பிட்ட பெருமானாகக் காட்சியளிக்கிறார். குரு பகவான் பூஜித்து குருபலம் அருளும் சிறப்பான தலம் திருலோக்கி. திருலோக்கி தலத்தில் அம்பிகையைத் தழுவிய தெய்விக வடிவைக் கண்டு நெகிழ்ந்த கருவூர்த்தேவர் திரைலோக்கிய சுந்தரனை திருவிசைப்பாவில் காந்தாரப் பண்ணில் பாடி மகிழ்ந்தார்.

அப்போது இந்தத் தமிழ் மாலையை இசையோடு பாடி வழிபடுவோர் இனிமையான இல்லற வாழ்க்கையைப் பெற்று நல்லறங்கள் பல புரிந்து இன்புறுவர் என்று போற்றுகிறார்.

வரன் அமையாத இளைஞர்கள், இளம் பெண்கள், பிரிந்துபோன தம்பதிகள், விதி வசத்தால் முதல் திருமண வாழ்க்கை சரிவர அமையாதவர்கள் எல்லோரும் இங்கு வந்து குருபகவானை தரிசித்து பலன் பெறுகிறார்கள். கும்பகோணம் – அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கிலோ மீட்டரில் திருலோக்கி அமைந்துள்ளது.

 

You Might Also Like

எந்த கோவில் சென்றால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்

ஆன்மீக நன்மைகளை உள்ளடக்கிய பிரிஞ்சு இலை

வீடுகளில் எலுமிச்சை விளக்குகளை ஏற்றலாமா? பெரியவர்கள் விளக்கம்

செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்ட பச்சைக்கற்பூரம்

யோக நிலையில் காட்சி தரும் கல்வி தெய்வம் ஹயக்ரீவர்

TAGGED:divorced couplesthirulokkiyoung womenYouthஇளம் பெண்கள்இளைஞர்கள்திருலோக்கிபிரிந்துபோன தம்பதிகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?