நடிகர் அஜித்குமார் தற்போது சினிமாவுடன் மோட்டார் ஸ்போர்ட்ஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். போர்ச்சுகலில் நடைபெறவுள்ள Michelin Le Mans Cup பந்தயத்தை முன்னிட்டு ரசிகர்களிடம் ஆதரவு கோரி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
“உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்” என்ற அவரது வேண்டுகோள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், சிலரிடையே விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர் மன்ற கலாசாரத்திலிருந்து விலகி இருப்பதாக தொடர்ந்து கூறி வந்த அஜித், தற்போது நேரடியாக ஆதரவு கேட்டிருப்பது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
