தமிழகத்தில் மழை தொடரும் நிலையில், இன்று கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட டெல்டா மற்றும் உள்மாவட்டங்களிலும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கான வாய்ப்பு காணப்படுகிறது.
அடுத்த சில நாட்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை தெரிவிக்கிறது.
