சென்னை: கணவரை விவாகரத்து செய்து விட்டார் என்று தன்னை பற்றி வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நிகழ்ச்சி தொகுப்பாளர் அஞ்சனா.
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர் ஆக இருந்தவர் அஞ்சனா. அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
தற்போது டிவி நிகழ்ச்சிகளை விட அவர் விருது விழாக்கள் மற்றும் பட விழாக்களை தான் அவர் அதிகம் தொகுத்து வழங்கி வருகிறார். கயல் பட நடிகர் சந்திரன் என்பவரை அஞ்சனா 2016ல் காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
இந்நிலையில் அஞ்சனா அவரது கணவரை விவாகரத்து செய்துவிட்டார் என X தளத்தில் ஒருவர் பதிவிட, அதை பற்றி ரசிகர்கள் அஞ்சனாவிடமே கேட்க தொடங்கிவிட்டனர். அதற்கு கோபமாக பதில் அளித்த அஞ்சனா, “எவனோ ஒருத்தன் போஸ்ட் போட்ட உடனே வந்துடுவீங்களா என்னை tag பண்ணிட்டு” என பதிவிட்டார். இதன் மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இருப்பினும் அந்த பதிவை அஞ்சனா சற்று நேரத்தில் நீக்கிவிட்டார். கோபத்தில் அப்படி பதிவிட்டுவிட்டதாக தெரிவித்து இன்னொரு பதிவை போட்டிருக்கிறார்.