சென்னை: “எனது தம்பியை முதலமைச்சராக பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது” என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, சினிமா வட்டாரங்களைச் சேர்ந்த பலரும் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடிகை குஷ்பூ முதலமைச்சர் விஜயை சந்தித்தார்.
எனது தம்பியை முதலமைச்சராக பார்ப்பது சந்தோஷமாக இருந்தது: அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது தம்பியை முதலமைச்சராக பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. எங்கள் தயாரிப்பாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “தி.மு.க. ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் பட்ட கஷ்டங்களை மறக்க முடியாது. ஐந்து ஆண்டுகளாக நடந்த பிரச்சினைகளை யாராலும் 10 நாட்களில் சரி செய்ய முடியாது. ஆனால், முதலமைச்சர் விஜய் இனிமேல் அதை சரிசெய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார்.