சென்னை: ரூட் கிளியர் ஆகிவிட்டதால் குறித்த தேதியில் திரைக்கு வருகிறது கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் ரிலீஸ் அறிவிப்பால் கார்த்தியின் ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாட தயாராகினர்.
ஆனால் வா வாத்தியார் படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் பெற்ற ரூ.21.78 கோடியில் ரூ.3.75 கோடியை இன்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா செலுத்திய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த நிபந்தனையை விதித்தது.