சென்னை: மங்காத்தா ரீ-ரிலீஸ் ஆக உள்ள நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் படங்களை இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.
இந்நிலையில், நாளை 23ம் தேதி மங்காத்தா படம் ரீரிலீஸ் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதனையடுத்து மங்காத்தா’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது.
நாளை மங்காத்தா ரீ-ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், ஷூட்டிங் ஸ்பாட் படங்களை இயக்குநர் வெங்கட்பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.