தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 1/4 கப்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கட்டு
சௌ சௌ – 1/2 கிலோ (உரித்து பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம்/பெரிய வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது
உப்பு – சுவைக்கேற்ப
அரைப்பதற்கு…
பச்சை மிளகாய் – 2
துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் சௌ சௌவை தோல் நீக்கி பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். பிறகு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து கிளாஸ் ஆகும் வரை நன்கு வதக்கவும். பின்னர் நறுக்கிய சௌ சௌ சேர்த்து 1 நிமிடம் கிளறவும். பிறகு அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, சௌ சௌவை மூடி 5-8 நிமிடம் வேக வைக்கவும். சௌ சௌ வேகும் முன் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நன்கு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். சௌ சௌ நன்கு வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து 3 நிமிடம் நன்கு கிளறி இறக்கவும். கடைசியாக கொத்தமல்லி தூவி நன்கு கிளறி சுவையான சௌ சௌ பொரியல் தயார்.