மனித வாழ்வில் மாறிவரும் கலாச்சாரங்களுக்கு ஏற்ப உணவு பழக்க வழக்கங்களும் அவ்வப்போது மாறிய வண்ணம் உள்ளது. நாம் சாப்பிடும் உணவுகளில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து உடலில் பல்வேறு விதமான நோய் எதிர்ப்பு தன்மைகள் குறைந்து கொண்டு வருவது நாம் அறிந்த ஒன்று ஆரோக்கியமான பால், முட்டை, கீரை வகைகள், இறைச்சி, மீன், சிறுதானியங்கள், பழங்கள் போன்ற உணவுகளை உட்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
நாம் அன்றாட தினமும் சாப்பிடும் உணவுகளை அதிகளவிலான புரதச்சத்து கொழுப்பு சத்துக்கள் நிறைந்திருப்பது அவசியமானதாகும் இவை நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க உடலுக்கு வலிமை சேர்க்க உதவுகிறது. நாம் அன்றாட தினமும் சாப்பிடும் உணவுகளை அதிகளவிலான புரதச்சத்து கொழுப்பு சத்துக்கள் நிறைந்திருப்பது அவசியமானதாகும். இவை நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க உடலுக்கு வலிமை சேர்க்க உதவுகிறது. உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றுவது உடலுக்கு நன்மை பயக்கும் அந்த வகையில் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பயனுள்ள குறிப்புகள்.
உருளைக்கிழங்குச் சமைக்கும்போது இருந்தால் அதனுடன் கொஞ்சம் ஓமம் மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து உருளைக்கிழங்கு கறி தயாரித்தால் மணமாக இருக்கும். மேலும் உருளைக்கிழங்கின் மூலம் ஏற்படும் வாய்வு நீங்கி செரிமானம் அதிகரிக்கும். இட்லிக்கு அடிக்கடி மாவு அரைப்பவர்கள் உளுந்து பயன்படுத்துவதற்கு பதிலாக சோயா மொச்சையை ஊற வைத்து மாவு அரைத்து பாருங்கள். சத்தான இட்லி, தோசை கிடைக்கும்.
முட்டையின் வெள்ளைக்கருயை எலுமிச்சை சாற்றுடன் கலந்து தலை முடி முழுவதும் தடவி 10 நிமிடம் கழித்து சாதாரணமாக ஷாம்பு போட்டு குளித்தால் கண்ணாடி போல உங்கள் கூந்தல் ஜொலிக்கும். செம்பருத்தி இலைகளை மைய அரைத்து தலை முழுவதும் தடவி 10 நிமிடம் ஊறவிட்டு அலசினால் கருகருவென கேசம் மிருதுவாக அலைபாயும். மீந்து போகும் பழைய சாதம் ஊறிய அந்த தண்ணீரில் இருக்கும் சத்துக்கள் அளவற்றவை. எனவே மீந்து போகும் சாதத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து விடுங்கள். மறுநாள் அதனை செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக வளரும்.