சென்னை: உடல் அசதி, சளி, இருமலை போக்க நண்டு ரசம் செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
கடல் நண்டு – 5
மிளகு தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்- தேவையான அளவு
பிரிஞ்சி இலை – 1
கறிவேப்பிலை – தேவையான அளவு
தக்காளி – 2
வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி- தேவையான அளவு
செய்முறை: முதலில் நண்டை கழுவி இடித்து தனியாக தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் நண்டை போடவும்.
அதில் வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய், பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு இடித்து போட்டாலும் சரி பேஸ்ட் போட்டாலும் உங்கள் வசதிக்கு ஏற்றது போல் சேர்த்துக்கொள்ளவும். பின்பு அதில் கருவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், இப்போது அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.
பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். அதனை மூடி வைத்து கொதிக்கவிடவும். இது அனைத்தும் நன்கு வெந்தவுடன் ஒரு சூப் போல் இருக்கும் அதனை எடுத்து ஒரு கிணத்தில் ஊற்றி மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.