May 3, 2024

வாழைப்பழ பணியாரம் செய்து கொடுங்கள்… குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க

சென்னை: குழந்தைகளுக்கு இப்படி வாழைப்பழ பணியாரம் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும். அதை எப்படி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசி – அரை கப்
மைதா மாவு – அரை கப்
வெல்லம் – 1 கப்
பெரிய கனிந்த வாழைப்பழம் – 2
ஏலக்காய் – 3
தேங்காய் துருவல் – கால் கப்
இட்லி சோடா – ஒரு பின்ச்
எண்ணெய் – தேவையான அளவு
பாதம் பொடித்தது – ஒரு தேக்கரண்டி
சுக்கு பொடி – அரை தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை: சிவப்பு அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும். பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஊறிய அரிசியை மிக்சியில் நைசாக அரைத்து அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய், மைதா சேர்த்து அரைக்கவும்.

கடைசியாக வாழைப்பழத்தை நறுக்கி சேர்த்து அரைக்கவும். வெல்லத்தை பொடித்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு ஆறியதும் வடிகட்டிகொள்ளவும்.

மாவில் இட்லி சோடா, பொடித்த பாதம், சுக்குபொடி, தேங்காய் துருவல், வெல்ல கரைசலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். குழி பணியார சட்டியை காயவைத்து லேசாக எண்ணெய் ஒரு துளி விட்டால் போதும்.

மாவை ஊற்றி தீயின் அளவை மிதமாக வைத்து மூடிபோட்டு 3 நிமிடம் வேக விடவும். மறுபுறம் திருப்பி போட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு மூடி போட்டு 3 நிமிடம் வேகவிடவும். சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம் ரெடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!