மனுஷ் ஷா–தியா சிட்டாலே ஜோடி, WTT கிராண்ட் ஸ்மாஷ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.
சீனாவில் நடைபெற்ற போட்டியில் ருமேனியாவின் எட்வர்ட் ஐயோனெஸ்கு–பெர்னடெட் ஸோக் ஜோடியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றில் இது முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
